சொன்னால் நடக்கும்

சொன்னால் நடக்கும் 

            தேவன் வார்த்தையாய் இருக்கிறார் என்று யோவான் 1:1 கூறுகிறது. அவருடைய வார்த்தையில் ஜீவன் உள்ளது. அந்த ஜீவன் ஆதியில் அனைத்தையும் ஜெனிப்பித்தது. அந்த வார்த்தையில் இருந்த வல்லமை ஆதாமுக்கு ஜீவனை அளித்தது. 
 ஆதி 1:3 " தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று" 
ஆதி 1:6 "பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்." 
     அது அப்படியே ஆயிற்று
ஆதி 1:9 "பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; 
    அது அப்படியே ஆயிற்று." என்று தேவனின் வார்த்தையின் வல்லமையை வெளிப்படுத்தும் வசனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். 
       வார்த்தை என்பதற்கான எபிரேய பதம் “Davar” தாவர் என்பதாகும். இதற்கு கட்டளையிடுதல் அல்லது ஆணையிடுதல் என்று அர்த்தம். ஆதியில் தேவன் அனைத்தும் உண்டாகும் படியாய் ஆணையிட்டார். அவர் வார்த்தையில் வல்லமை உண்டு, ஜீவன், அற்புதம்,சுகம்,அன்பு, ஆறுதல்,சமாதன்ம் அனைத்தும் உண்டு.

          மத் 8ஆம் அதிகாரத்தில் குஷ்டரோகி ஒருவன் சுகம் வேண்டி இயேசுவை நோக்கி வேண்டுவதை பார்க்கிறோம். சுகம் வேண்டும் என்று கேட்ட அவனைப் பார்த்து இயேசு சித்தம் உண்டு, சுத்தமாகு என்று கூறினார். அவர் வார்த்தையில் இருந்த வல்லமை அவனை   சுகமாக்கிற்று.

         மாற்கு 4ஆம் அதிகாரத்தில் இயேசுவும்       சீஷர்களும் படவில் மறுகரைக்கு செல்லும்   போது கடல் கொந்தளிக்கிறது. அதனால் சீஷர்கள் இயேசுவை கூப்பிடுகிறதாக பார்க்கிறோம். உடனே இயேசு காற்றையும் கடலையும் அதட்டினார். அந்நேரமே காற்றும் கடலும் அமையாயிற்று.

           அன்பானவர்களே, குஷ்டரோகியைப் போல கொடிய வியாதியில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்களோ?அல்லது மனிதர்களால் உதவி செய்ய முடியாத பல விதமான பிரச்சனைகளில் இருக்கிறீர்களோ?
        சங் 33:9 “அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.” என்று கூறுகிறது. அவர் இந்த நேரத்தில் தம்முடைய வார்த்தையை அனுப்பி உங்களை சுகமாக்குகிறார். இயேசுவின் நாமத்தில் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வை உண்டாகும் ஆண்டவருடைய வார்த்தை உங்களை நோக்கி கடந்து வருகிறது. உங்கள் அற்புதத்தை இயேசுவின் நாமத்தில் விசுவாசித்து இப்பொழுதே பெற்றுக் கொள்ளுங்கள். கலங்காதீர்கள் தேவ ஜனமே அவர் தம்முடைய உள்ளங்கையில் உங்களை வரைந்துள்ளார்.நீங்கள் அவரால் மறக்கப்படுவதில்லை.
ஆமென்!!!!


   

1 Comments

  1. இயேசுவின் நாமத்தில் கேட்கிற எவனும் பெற்றுக் கொள்கிறான்..... ஆமென்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post