துக்கித்துக்கொண்டிருப்பாய்
"கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்" 1 சாமுவேல் 16:1

சவுலை ராஜாவாக இராதபடிக்கு தள்ளின காரியத்தில் சாமுவேல் இருதயத்தில் இருந்த துக்கத்தை தேவன் அறிந்திருந்தார். சாமுவேல் தன் துக்கத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை, தேவனிடம் சொல்லி அங்கலாய்க்க வில்லை. அவர் இருதயத்தில் இருந்த வேதனை, துக்கத்தை மனிதர்களால் அறிந்துக் கொள்ள முடியவில்லை, புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தேவன் அதை அறிந்திருந்தார். தேவன் புரிந்து கொண்டார். சாமுவேலில் துக்கத்தை புரிந்த தேவன் அவரின் துக்கத்திற்கு தீர்வை கொடுத்தார்....
அன்பானவர்களே!!! தேவன் உங்கள் துக்கத்தை, உங்கள் அங்கலாய்ப்பை அறிந்துள்ளார். ஒருவேளை நீங்கள் சாமுவேலைப் போல யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். தேவனிடம் கூட சொல்ல இயலாத மனநிலையில் நீங்கள் இருந்துக்கொண்டிருக்கலாம். ஆனால் உங்களின் துக்கத்தை அறிந்துள்ள தேவன் அதற்கான தீர்வை தருவார். உங்கள் இருதயத்தின் விருப்பங்கள், ஏக்கங்கள் எல்லாவற்றையும் அறிந்துள்ளார். அதையும் நிறைவேற்றுவார். உங்கள் ஏக்கங்களை நிறைவேற்ற உங்களுக்காக தம்முடைய தூதர்களை அனுப்புவார். என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய பல ஏக்கங்களை நிறைவேற்றியுள்ளார். அதுப்போல உங்கள் விருப்பங்களையும் நிறைவேற்றுவார், துக்கங்களையும் மாற்றுவார்.

Amen. First time i see ur ministry page. I'm really glad. God bless your ministry and family Sister
ReplyDeleteAmen . Thank u brother
DeleteGod bless you
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAmen Godbless you 🙏 sister.
ReplyDeleteThank you
ReplyDeleteAMEN
ReplyDeleteWelcome to my blog..
DeletePost a Comment